Subscribe Us

கட்அவுட்களை அகற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு


தமது கட்அவுட்களை அகற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸாம்மிலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு நகரின் சில பகுதிகளில் தமது புகைப்படம் அடங்கிய கட்அவுட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

மேயரை நேரடியகத் தொடர்பு கொண்டு இவ்வாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

கட்அவுட்களை காட்சிப்படுத்துவது நகரின் சுற்றாடலையும் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தரவினை ஏற்றுக்கொண்ட மேயர் முஸாம்மில், உடனடியாக குழுவொன்றை அனுப்பி கட்அவுட்களை அகற்றியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாரியளவில் கட்அவுட்களை காட்சிப்படுத்தி சுற்றாடலை மாசுபடுத்துவதாகவும் தாம் அவ்வாறு காட்சிப்படுத்தப் போவதில்லை எனவும் அப்போதைய பொது வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தேர்தல் பிரச்சார மேடைகளில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments