Subscribe Us

கல்பிட்டி - பாலாவி வீதியில் நாச்சிக்கள்ளிய விபத்தில் இரு இளைஞர்கள் பலி



கல்பிட்டி - பாலாவி வீதியில் நாச்சிக்கள்ளிய தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். 

கல்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் காயமடைந்த இளைஞர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். 

20 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.


-KV Reporter-

Post a Comment

0 Comments