Subscribe Us

header ads

எதிர்க்கட்சித் தலைவர் தெரிவில் சபாநாயகர் மீது தவறில்லை: உதய கம்மன்பில


எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய மீது எந்த தவறும் இல்லை என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பு இல்லை என முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பிரகாரம் பொதுச் செயலாளர் விஸ்வா வர்ணபால, சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளித்திருந்தாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதியை பெறாமல் அந்த கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளரின் கடிதத்தை அடிப்படையாக கொண்டு நாடாளுமன்றத்தில் அடுத்த பெரிய கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க சபாநாயகர் தீர்மானித்தார்.

இதனால், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு தொடர்பில் சபாநாயகர் மீது எந்த தவறும் இல்லை எனவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments