Subscribe Us

header ads

சில நியமனங்கள் வருத்தமடையச் செய்கின்றன – ரஞ்சன்


அமைச்சரவை நியமனங்களில் சிலது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக சேவைகள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இவை தன்னால் கட்டுப்படுத்த முடியாதவை எனவும், என்றாலும் இதற்கு எதிராக போராடுவதை நிறுத்தப் போவதில்லை எனவும் ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
தனக்கு கிடைத்துள்ள பிரதி அமைச்சுப் பதவிக்கு வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக தனது டுவிட்டர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள குறிப்பிலேயே அவர் அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் தனது ஆட்சேபனையையும் வெளியிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments