நாட்டு நிலவரம் பற்றிய செய்திகள், தவறான பாதைக்கு நம்மை வழிநடத்துகின்றனவா? தற்போதைய கால கட்டத்தில் ஒரு செய்தி பல்வேறு கோணங்களில், பல்வேறு ஊடகங்களால் அலசப்படுவதால் சராசரி மனிதன் எப்படி வழிநடத்தப்படுகிறான்? என பட்டவர்தனமாய் இரண்டே நிமிடங்களில் சொல்லியிருக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் யூடியூபில் வெளியாகியுள்ளது.
இது போன்ற செய்திகள், ஒரு சாராரை மட்டும் ஆதரிக்கும் பார்வையால், சக பாலினத்தின் மீதான மனிதனின் நம்பிக்கையை நாம் முழுமையாக இழந்தே போக காரணமாகலாம்! என்கிற உண்மை நிலவரத்தை ‘பளிச்’ என சொல்லியிருக்கிறது இந்த விழிப்புணர்வு வீடியோவை உருவாக்கியிருக்கும் இளைஞர்களின் குழு.
உலகம் பற்றிய உங்களது புரிதலின் நிலவரத்தை அறிய இந்த வீடியோ உதவும் என நிச்சயம் நம்பலாம்..! மறுபக்கத்தைக் (ப்லிப் சைட்) காண இங்கே கிளிக் செய்யவும்..,
0 Comments