Subscribe Us

header ads

மஹிந்த, கோத்தா போர்க்­குற்­றத்தில் ஈடு­பட்­டி­ருந்தால் தண்­டிக்­கப்­பட வேண்டும்


முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ மற்றும் உயர் இரா­ணுவ அதி­கா­ரிகள் போர்க்­குற்றச் செயல்­களில் ஈடு­பட்­டி­ருந்தால் நிச்­சயம் தண்­டிக்­கப்­பட வேண்­டு­மென முன்னாள் இரா­ணுவத் தள­பதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்­துள்ளார்.
தொலைக்­காட்சி ஒன்­றுக்கு அளித்த விசேட நேர்­கா­ணலில் அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார்.
இதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மஹிந்த ராஜ­பக் ஷ மாறி­விட்டார் என நான் கரு­த­வில்லை. பிர­த­மரின் பதவிப் பிர­மாண நிகழ்­வு­களின் போது மஹிந்த எனக்கு அரு­கா­மையில் அமர்ந்­தி­ருந்தார். பல தட­வைகள் என்னைப் பார்த்து கதைக்க முயற்­சித்தார். நான் அவரை பார்க்­கா­ம­லேயே இருந்தேன். பின்னர் ஹேமா பிரே­ம­தா­ஸவை விலக்கிக் கொண்டு எப்­படி சரத் என மஹிந்த கேட்டார்.

அப்­போது அதற்குப் பதி­ல­ளிக்கப் போயி­ருந்தால் நீண்ட விளக்கம் அளித்­தி­ருக்க வேண்டும். அதனால் பிரச்­சி­னை­யில்லை என பதில­ளித்து விட்டு அந்தப் பக்­கத்­தி­லி­ருந்து பார்­வையை விலக்கிக் கொண்டேன்.

ஒரு தடவை பாம்பு கொத்­தி­யது, அதே பாம்பின் வாயில் மீண்டும் ஒரு­முறை கைவி­டு­வது பிழை­யல்­லவா. நான் மஹிந்த மாறி­விட்டார் என கரு­த­வில்லை. நான் பதவி வகித்த காலத்தில் வெள்ளை வானில் எவ ரும் கடத்­தப்­பட்­ட­மைக்கு எவ்­வித ஆதா­ரங்­களும் கிடை­யாது. எனது காலத்தில் எக்­னெ­லி­கொட கடத்­தப்­ப­ட­வில்லை. நான் ஓய்வு பெற்றுக்கொண்­டதன் பின்­னரே அந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.
கிரி­தலை முகாமில் போலிப் புலிகள் அமைப்பு ஒன்றை நடத்திச்சென்­ற­தாக புல­னாய்வுப் பிரி­வினர் ஒப்­புக்­கொண்­டுள்­ளனர். நான் பதவி வகித்த காலத்தில் அவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­ற­வில்லை. நிச்­ச­ய­மாக எக்­னெ­லி­கொ­ட­விடம் பழி­வாங் கல் இடம்­பெற்­றுள்­ளது. குமரன் பத்­ம­நாதன் பயங்­க­ர­வாதச் செயல்­களில் ஈடு­ப­ட­வில்லை என சட்ட மா அதிபர் கூறினால் சட்ட மா அதி­பரே பயங்­க­ர­வாதி. எனவே அவ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். பிர­பா­கரன் துப்­பாக்­கியால் சுட்டு உயி­ரி­ழந்தார் என எனக்குத் தோன்­ற­வில்லை. பெரிய பீரங்கி அல்­லது மோட்டார் குண்டு ஒன்றின் இரும்புப் பகு­தி­யொன்று தலையில் அவர் அறி­யா­ம­லேயே பட்­டி­ருக்க வேண்டும். அத­னால்தான் அவ­ரது கண்கள் மூடப்­ப­ட­வில்லை.
இரண்டு பிர­தான கட்­சிகள் ஒன்­றி­ணைந்து அர­சாங்கம் அமைத்­தி­ருப்­ப­தனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­பட வேண்டும். அதில் தவ­றில்லை. போரின் போது சரி­யான வழி­மு­றைகள் பின்­பற்­றப்­பட்­டது என அமெ­ரிக்கா கரு­தி­ய­தனால், உள்­ளக விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென தெரி­வித்­துள்­ளது. விசா­ரணை நடத்­தப்­ப­டு­வது மிகவும் நல்­லது. எனக்கு எதி­ராக விசா­ரணை நடத்­தி னால் நான் அதனை மிக விரும்பி ஏற்­றுக்­கொண்டு விசா­ர­ணை­களை எதிர்­கொள்வேன்.
கோத்தபாய ராஜ­பக் ஷ, மஹிந்த ராஜ­பக் ஷ அல்லது உயர் இராணுவ அதிகாரிகள் போர் க்குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவ ர்களுக்கு நிச்சயம் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments