கூகுள் நிறுவனம், எல்.ஜி. மற்றும் ஹுவாவே நிறுவனங்களுடன் இணைந்து இரண்டு நெக்சஸ் ஆண்டிராய்டு போன்களை நேற்று வெளியிட்டது.
கடந்த 2013-ம் ஆண்டு கூகுள் நிறுவனம், நெக்சஸ் 5 போனை வெளியிட்டது. இதன், அடுத்தகட்ட பதிப்பான நெக்சஸ் 5X-ஐ நீண்ட இடைவெளிக்குப் பின்பு எல்.ஜி. நிறுவனத்துடன் இணைந்து, தற்போது வெளியிட்டுள்ளது.
இது மட்டுமின்றி, கடந்த ஆண்டு வெளிவந்த நெக்சஸ் 6-ன் அடுத்த பதிப்பான நெக்சஸ் 6P-யும் ஹுவாவே நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ளது கூகுள். இந்த இரு போன்களும் ஒரே மாதிரியான, சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளன.
இந்தப் போன்கள் ஐபோனைக் காட்டிலும் அதிகமான மெகா பிக்சல் கொண்ட கேமராக்களுடன் வெளிவந்துள்ளது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. வேகமாக பேட்டரி சார்ஜ் ஏறும் டைப் சி வகை பேட்டரி ஐபோனில் இருப்பது போலவே இந்த நெக்சஸ் போன்களிலும் உள்ளது. ஆகவே, இந்த இரு நெக்சஸ் போன்களும் ஐபோனுக்கு பெரிய போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments