Subscribe Us

அமைச்சுப் பதவிகள் : அரசின் மோசமான நடவடிக்கைகளை இனம் காட்டுகிறது


நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகள் குறித்து குறித்து திருப்தி அடைய முடியாது என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொண்ட விதத்தைக் கொண்டே, நல்லாட்சி அரசாங்கத்தின் மோசமான நடவடிக்கைகளை இனம் கண்டுகொள்ள முடியும்.

இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நாற்பது பேர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை வரையறுப்பதாகவும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை வரையறுப்பதாகவும் வாக்குறுதி அளித்திருந்தது.

எனினும், எவ்வித அடிப்படையும் இன்றி அமைச்சுப் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இன்னமும் பகிரப்பட்டு வருகின்றது.

மஹிந்தவுடன் ஒன்றாக இருந்து சமூக விரோதச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் பிரதி அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரத்திற்காக அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கையே இடம்பெற்றுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments