Subscribe Us

header ads

பொதுபலவுக்கு எதிரான வழக்கு: சுமுகமாக தீர்த்துக்கொள்ள இணக்கம் (Video)


கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக றிசாத் பதியுதீன் பணியாற்றியபோது, அவருடைய அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் ஏழு பிக்குகள் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது, சந்தேகநபர்களான பொதுபலசேனா அமைப்பின் ஏழு தேரர்களில் இருவர் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.
வழக்கு விசாரணையின் பின்னர் டெய்லி சிலோனுக்கு கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி மைத்ரி குணரத்தன:
சம்பந்தப்பட்ட பிக்குகளுடன் மேற்கொண்ட பேர்ச்சுவார்த்தைகளின் போது, குறித்த சம்பவத்திற்கு கவலையைத் தெரிவித்து, வழக்கை முடிவுக்கு கொண்டு வரவும் விருப்பம் தெரிவித்தனர். இதனை நாம் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தோம். என்றாலும் இன்றைய தினம் இரு பிக்குமார் மன்றில் ஆஜராகாமையினால் குற்றப்பத்திரிகையைக் கூட வாசிக்க முடியவில்லை. இதனால் இது தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி சம்பந்தப்பட்ட பிக்குமார் எழு போரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் கைத்தொழில் அமைச்சு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான மைத்ரி குணரத்தன, சிராஸ் நூர்தீன் மற்றும் சட்டத்தரணி ரமீஸ் பசீர் ஆகியோர் ஆஜராகினர்.

Post a Comment

0 Comments