Subscribe Us

SLMC யில் கே.ஏ. பாயிஸுக்கு இடம் இல்லை - SLMC அதி உயர்பீட உறுப்பினர் Jowfar Marikkar தெரிவிப்பு


SLMC யில் நான்கு பேரை மீண்டும் சேர்த்துக்கொள்வதில்லை என தலைமைப் பீடத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த நால்வரில் கே.ஏ. பாயிஸும் ஒருவர்’ என SLMC அதி உயர்பீட உறுப்பினரும், புத்தளம் மத்தியக் குழு தலைவரும், புத்தளம் நகர அமைப்பாளருமாகிய ஜவுபர் மரிக்கார் The Puttalam Times உடன் நடத்திய சிறப்பு செவ்வியலில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

தனது அரசியல் வங்குரோத்து நிலையை மூடி மறைப்பதற்காக SLMC யில் இணைந்துகொள்ள போவதாகவும்ACMC யின் பிடியிலிருந்து SLMC யையும் புத்தளத்தையும் காப்பாற்றுவதற்கு தம்மால் மட்டும்தான் முடியும் போன்றதொரு பிரம்மையை தனது ஆதரவாளர்கள் ஊடாக சமூக ஊடகங்களில் பரவச் செய்திருப்பதை காணுகின்றோம். ஆனால் எமது கட்சி (SLMC) இவ்வாறானதொரு பாதுகாவலனை எதிர்பார்க்கும் நிலையில் இல்லை.

தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர், கே.ஏ. பாயிஸின் செயல்பாடுகளினால்SLMC க்கு ஏற்பட்ட இழுக்கிற்கும் அவருடைய நடத்தையினால் ஏற்பட்ட கலங்கத்திற்கும் புத்தளம் சமூகத்துக்கு பதில் கூற வேண்டிய இக்கட்டான நிலைக்கு SLMC புத்தளம் மத்திய குழு தள்ளப்பட்டது. இந்த பின்னணியில் கே.ஏ. பாயிஸை மீண்டும் கட்சியில் சேர்ப்பதை தலைவர் ரவுப் ஹக்கீம் ஏற்றுக்கொள்ள மாட்டார். கே.ஏ. பாயிஸை நம்பி அரசியல் செய்யும் அளவுக்கு SLMC வங்குரோத்து நிலையில் இல்லை.

SLMC யைப் பொறுத்தவரை கே.ஏ. பாயிஸ் மஹிந்த ராஜபக்ஷவின் கையாள் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம். மஹிந்தவின் அரசியல் வீழ்ச்சியடைந்தவுடன் பாயிஸ் தனது கையில் இருப்பதாகக் கூறிக்கொண்ட ‘மந்திரக் கோலின்’ சக்தியும் மங்கிவிட்டது. செல்வதற்கு இடம் இல்லாமல் பாராளுமன்ற தேர்தலில் PPAF உடன் சேர்ந்தார். தற்போது SLMC உடன் சேருவதாக கதைகளை பரப்புகின்றார். சுருங்கக் கூறுவதாயின் ‘சரணாகதி அரசியல்’ செய்கின்றார்.

SLMC யில் பரவியிருந்த சில வைரசுக் கிருமிகளை தலைமைப் பீடம் இனங்கண்டுவிட்டது. நடந்து முடிந்த தேர்தல் களத்தில் இவர்களின் ‘இரட்டை வேடம்’ தெளிவாக வெளிப்பட்டது. இது பற்றிய அறிக்கை தலைமைப் பீடத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களின் நடவடிக்கை குறித்து விரைவில் விளக்கம் கோரப்படும். அதன் முடிவில் இவர்கள் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (நகர சபை, பிரதேச சபை) தொடர்பாக அதி உயர்பீடம் கலந்துரையாடவுள்ளது. அதுபோன்று நகர மற்றும் கிராம மட்ட கமிட்டிகளுடனும் இதன் சாதக பாதகங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தனித்து போட்டியிடுவதா அல்லது இணைந்து போட்டியிடுவதா என்ற இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.

மக்களின் கருத்துக்கு முதன்மை இடம் வழங்கும் கட்சி என்ற வகையில் உலமாக்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள் உட்பட பொது மக்களுடனான கருத்துப் பரிமாறல்களும் கலந்துரையாடல்களும் நடத்தப்படவுள்ளன. இளைஞர்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு புதிய சிந்தனைகளுக்கு பொருத்தமான களம் உருவாக்கப்படும்.

புத்தளத்தின் அரசியல் எதிர்காலம் புதிய சிந்தனைகளிடம் ஒப்படைக்கப்படும்”


இவ்வாறு தனது செவ்வியலில் கூறினார் SLMC அதி உயர்பீட உறுப்பினரும், புத்தளம் மத்திய குழு தலைவரும், புத்தளம் நகர அமைப்பாளருமாகிய ஜவுபர் மரிக்கார். 

Post a Comment

0 Comments