கடந்த 2015.08.09 அன்று இம்முறை ஐக்கிய தேசிய கட்சி சார்பாக திருமலை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்தேர்தலில் போட்டி இடும் வெற்றி வேட்பாளரும்,கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கெளரவ இம்ரான் மகரூப் அவர்களை ஆதரிக்கும் மாபெரும் பொதுப்பிரச்சாரக்கூட்டமானது புல்மோட்டையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் கட்சியின் பல முக்கியஸ்தர்கள் உரை நிகழ்த்தியதோடு புல்மோட்டை மக்களின் தேவைகள், குறைகள் , எதிர்கால எதிர் பார்ப்புகள் தொடர்பாக யாசீர் எம்.அனீபா மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
இதில் கெளரவ இம்ரான் மகரூப் அவர்கள் உரையாற்றும் போது, தான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் பட்சத்தில் தற்போது புல்மோட்டை மக்கள் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகள், சிறுகடல் மற்றும் மீன்பிடித்தொழில், இளைஞர்களுக்கான வேலை இல்லாப்பற்றாக்குறை போன்ற விடயங்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் உறுதி மொழியளித்தார்.
0 Comments