Subscribe Us

header ads

சுதந்திரக் கட்சி மீள் புனரமைப்பு


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக மீள் புனரமைக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அக்கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் நிறைவேற்றுக் குழு என்பவற்றின் உறுப்புரிமையும் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா அண்மையில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, துமிந்த திஸாநாயக்க பதில் செயலாளராக நியமிக்கப்பட்டார். அத்துடன், மத்திய செயற்குழுவில் 13 பேர் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments