ஜக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு என ஒதுக்கப்பட்ட தேசிய பட்டியலில் கட்சி தலைமைத்துவம் முதலாவதாக எனது பெயரை சிபாரிசு செய்திருந்தது,தேர்தல் முடிவுகளின் அடிப்டையில் கட்சித் தலைமை சில மாற்றங்களை செய்ய நேரிட்டது.அந்த வகையில் எனது முழுமையான சம்மதத்துடனேயே தேசியப்பட்டியலில் எனது பெயரை மாற்றி புத்தளம் மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்ட எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் எம்.எம்.எச்.நவவிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.ஆர்.ஜெமீல் தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
தேசிய பட்டியில் தொடர்பில் பல்வேறு கருத்துக்களும்,விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பில் மக்களுக்கும்,எமது கட்சியின் போராளிகளுக்கும் உண்மையினை எடுத்துக் கூறுவது பொருத்தம் என தெரிவித்துள்ள ஜெமீல்,தான் வகித்துவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியினை வெகுவிரைவில் ராஜினாமா செய்யவுள்ளதாகவும் இதன் போது தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபையின் குழுத்தலைவராக தான் இருப்பதாகவும்,அந்தக்கட்சி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரைக்கும் தவறிவிட்டதாகவும்,வெறும் அலங்காரத்துக்காக மட்டும் பதவி வகிப்பதன் மூலம் சமூகத்திற்கு எவ்வித நன்மையும் கிட்டப் போவதில்லை என்பதை ஏற்கனவே தாம் அறிந்திருந்த போதும்,மாற்று அரசியல் தலைமைத்துவத்தின் மூலம் மட்டுமே சில அடைவுகளை அடைந்து கொள்ள முடியும் என்பதை சிந்தித்து,தெளிவான முடிவுடன் றிசாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலாங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொள்ளும் தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை தற்போரதைய முஸ்லிம் காங்கிரஸினால் செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது.இதனை செய்யும் துணிவும் தைரியமும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு இருக்கின்றது.இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்து போட்டியிட்டு 33 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை எடுத்திருந்த நிலையில்,எமது கட்சிக்கு ஒரு ஆசனம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்.பின்னர் வெளிவந்த அறிவிப்பில் எமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதை அறிந்து கொண்டோம்.எனவே இது தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்றும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும்,கட்சியின் தேசிய அமைப்பாளருமான ஜெமீல் மேலும் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் இம்முறை பாரளுமன்றத்துக்கு தெரிவான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,எம்.எச்;.எம்.நவவி,எம்.இஷாக் ஹாஜி.மற்றும் திகாமடுல்ல மாவட்;டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்ட வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஜீத் (எஸ்.எஸ்.பீ),தென்கிழக்கு பல்கைலக்கழக முன்னாள் உப-வேந்தர் ஹ-சைன் இஸ்மாயில்,கல்முனை மாநாகர முன்னாள் மேயர் சிராஸ் மீரா சாஹிப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஜக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு என ஒதுக்கப்பட்ட தேசிய பட்டியலில் கட்சி தலைமைத்துவம் முதலாவதாக எனது பெயரை சிபாரிசு செய்திருந்தது,தேர்தல் முடிவுகளின் அடிப்டையில் கட்சித் தலைமை சில மாற்றங்களை செய்ய நேரிட்டது.அந்த வகையில் எனது முழுமையான சம்மதத்துடனேயே தேசியப்பட்டியலில் எனது பெயரை மாற்றி புத்தளம் மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்ட எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் எம்.எம்.எச்.நவவிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.ஆர்.ஜெமீல் தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலநற்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
தேசிய பட்டியில் தொடர்பில் பல்வேறு கருத்துக்களும்,விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பில் மக்களுக்கும்,எமது கட்சியின் போராளிகளுக்கும் உண்மையினை எடுத்துக் கூறுவது பொருத்தம் என தெரிவித்துள்ள ஜெமீல்,தான் வகித்துவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியினை வெகுவிரைவில் ராஜினாமா செய்யவுள்ளதாகவும் இதன் போது தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபையின் குழுத்தலைவராக தான் இருப்பதாகவும்,அந்தக்கட்சி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரைக்கும் தவறிவிட்டதாகவும்,வெறும் அலங்காரத்துக்காக மட்டும் பதவி வகிப்பதன் மூலம் சமூகத்திற்கு எவ்வித நன்மையும் கிட்டப் போவதில்லை என்பதை ஏற்கனவே தாம் அறிந்திருந்த போதும்,மாற்று அரசியல் தலைமைத்துவத்தின் மூலம் மட்டுமே சில அடைவுகளை அடைந்து கொள்ள முடியும் என்பதை சிந்தித்து,தெளிவான முடிவுடன் றிசாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலாங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொள்ளும் தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை தற்போரதைய முஸ்லிம் காங்கிரஸினால் செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது.இதனை செய்யும் துணிவும் தைரியமும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு இருக்கின்றது.இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்து போட்டியிட்டு 33 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை எடுத்திருந்த நிலையில்,எமது கட்சிக்கு ஒரு ஆசனம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்.பின்னர் வெளிவந்த அறிவிப்பில் எமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதை அறிந்து கொண்டோம்.எனவே இது தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்றும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும்,கட்சியின் தேசிய அமைப்பாளருமான ஜெமீல் மேலும் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் இம்முறை பாரளுமன்றத்துக்கு தெரிவான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,எம்.எச்;.எம்.நவவி,எம்.இஷாக் ஹாஜி.மற்றும் திகாமடுல்ல மாவட்;டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்ட வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஜீத் (எஸ்.எஸ்.பீ),தென்கிழக்கு பல்கைலக்கழக முன்னாள் உப-வேந்தர் ஹ-சைன் இஸ்மாயில்,கல்முனை மாநாகர முன்னாள் மேயர் சிராஸ் மீரா சாஹிப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
-Irshard Rahumathullah-

0 Comments