Subscribe Us

header ads

சுதாவின் சகாக்களை கைது செய்ய நடவடிக்கை

சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான சமந்த குமார எனும் வெலே சுதாவின்  சகாக்கள் நால்வரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இரண்டு பெண்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களே போதைப்பொருள் வர்த்தகரான சமந்த குமார எனும் வெலே சுதாவுடன் தொடர்பு உள்ளதாகவும் அவர்களிடம் புகைப்படங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
தெஹிவளையைச் சேர்ந்த திலின் நில்மானி சானக பொன்சேகா, வெள்வத்தையைச் சேர்ந்த நதிக்க நில்மினி, சுகத் குமார  ஆகியோரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0112320141, 01123220145, 0112422176 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் அறிய தரலாம் என குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments