மகிந்த ராஜபக்ச இன்னமும் பதவி ஆசை கொண்டு ஆட்சிபீடமேற நினைப்பது வெட்கக் கேடான செயல் என்று விபரித்துள்ளார் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க.
மகிந்த ராஜபக்ச இனவாத்தை தூண்டி ஆட்சிபீடமேற நினைக்கிறார் என்றும் அதற்கு எவரும் துணைபோகக்கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த எட்டாம் திகதி பெற்ற வெற்றியை தக்க வேண்டும் என்று தெரிவித்த அவர் தோற்றுப்போன மகிந்த ராஜபக்ச நிழல் போலத் தொடர்ந்து ஆட்சி பீடமேற நினைப்பதாகவும் கூறுகிறார்.
இதேவேளை தற்போது நடைபறும் நல்லாட்சியில் புத்திக்கூர்மையான இரண்டு தலைவர்கள் உள்ளதாகவும் அவர்களை தொடர்ந்தும் ஆட்சியில் அமர்த்தி மகிந்தவின் ஆபத்தை தவிர்க்குமாறும் அர்ஜூன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.


0 Comments