Subscribe Us

header ads

" தலைவா! இந்த வெத மஹத்தயா மிருகங்களுக்கு வைத்தியம் பார்ப்பவர்" அரசியல் சந்தர்ப்பவாதிகள் ..


இன்னும் ஒரு சில நாட்களே பொதுத் தேர்தலுக்கு எஞ்சியுள்ள வேளையில், நமது அரசியல்வாதிகள் வாக்கு வேட்டையில் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆதரவாளர்கள் தமது தலைவர்களை தலைக்கு மேல் வைத்து கும்பிடுவதும், சக வேட்பாளர் தமது அதீத முயற்சிகளையும், வாக்குறுதிகளையும் மேடைகளில் அள்ளி வீசும் போது, ஏனைய வேட்பாளர்கள் தூங்கி விழுவதும், இன்னும் சிலர் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால், செப்டம்பர் மாதத்திற்கு பின்பு திருமணம் முடிக்கும் ஒவ்வொரு ஜோடிக்கும் தலா இரண்டு இலட்சங்கள் தருவதாக தேர்தல் ஜோடிப்புகள் செய்வதும் என பல வகைப்பட்ட தேர்தல் கால சிரிப்பூட்டும் சம்பவங்களுக்கு பஞ்சமில்லாமல் காணப்படுகிறது.அந்த தொடரில், பத்திரிகையில் ஹெட்டிபொலயில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். 

ஒரு சாவு விழுந்துள்ளது , அந்த பகுதியில் போட்டியிடும் பிரபல வேட்பாளர் ஒருவர் அச்சாவு வீட்டிற்கு தமது அனுதாபத்தை தெரிவிக்க போய் உள்ளார். 

அந்த சந்தர்ப்பர்த்தை தமது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த எண்ணிய வேட்பாளர், தமது அல்லக்கை ஒருவரிடம் அவர் யார் என விசாரிக்க,அவர் ஒரு 'வெத மஹத்தயா' என கூறியுள்ளார். உடனே அங்கிருந்த வீட்டாரிடம் அனுமதி கோறியபின்பு தமது தேர்தல் பிரச்சாரத்தை அரம்பித்த வேட்பாளர். " இவர் மிகவும் நல்ல மனிதர், இவர் இந்த ஊரில் உள்ள பெயர்போன வெத மஹத்தயா. இவர் உயிரோடு இருக்கும் காலங்களில் எமது பெற்றோர் இவரிடமே தமது மருத்துவ தேவைக்களை பூர்த்தி செய்து வந்துள்ளனர்...." என பேசிக்கொண்டு போகும் போது கூடி இருந்த மக்கள் மத்தியில் சல சலப்பு ஏற்பட்டது. 

உடனே அவருடைய அல்லக்கைகளில் ஒருவன் தமது தலைவனின் காதினுள் " தலைவா! இந்த வெத மஹத்தயா மிருகங்களுக்கு வைத்தியம் பார்ப்பவர்" என்று கூறவே, எங்கள் தலைவர் மரணித்தவருடைய சிறந்த மறுப்பிரவிக்காக பிரார்த்தித்து தமது சிற்றுரையை முடித்து , வெளுத்த முகத்தோடு அவ்விடத்திலிருந்து மின்னலாய் வெளியேறினர்.


நன்றி : The Island 


- Aboo


Post a Comment

0 Comments