Subscribe Us

இடதுகைப் பழக்கம் கொண்டவர்கள் புத்திசாலிகள் என நம்பப்படுவது உண்மையா?...



ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13-ம் தேதி இடதுகைப் பழக்கம் கொண்டவர்களுக்கான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இடதுகைப் பழக்கம் கொண்டவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த நாளில் அறிந்துகொள்வோம்.

அமெரிக்காவின் 12 ஜனாதிபதிகளில் ஒபாமா உட்பட 6 பேர் இடதுகைப்பழக்கம் கொண்டவர்களே. உலகில் மொத்த ஆண்களில் பதிமூன்று சதவிகித்தினர் இடதுகைப் பழக்கம் கொண்டவர்கள். பத்து சதவிகித பெண்கள் இடதுகைப் பழக்கம் கொண்டவர்கள்.

இடதுகைப் பழக்கம்தான் மனிதனை குரங்கிலிருந்து வித்தியாசப்படுத்தியது என்றால் நம்புவீர்களா? ஆம், முதலில் உருவான மனிதர்கள் இடதுகையை உபயோகப்படுத்தியதாலேயே அவர்கள் பேசத் தொடங்கினர். பேச்சினைக் கட்டுப்படுத்தும் திறன் மூளையின் இடப்புறமே உள்ளது என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தப் பழக்கம் ஏற்படக் காரணம் என்னவாக இருக்க முடியும்? ஒரே பிரவசத்தில் ஒன்றாய்ப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இரண்டும் இடதுகைப் பழக்கம் கொண்டவர்களாக இருக்க இருபத்தைந்து சதவிகிதம் வாய்ப்பு இல்லை. ஆகையால், இது மரபணு சார்ந்தப் பழக்கம் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

பெற்றோர் குழந்தையைத் தூக்கும் விதம், உணவூட்டுவது என, அவர்கள் இடதுகைப் பழக்கம் கொண்டவர்களாக இருந்தால் குழந்தையும் அவ்வாறே மாற வாய்ப்புள்ளதாக இதுகுறித்த ஆய்வுகளை நடத்திவரும் உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் முதன்முதலில் தனது இடக்கையால் பொருட்களை பிடிக்க தொடங்கினால், அதை மாற்றி, கஷ்டப்பட்டு வலக்கைப் பழக்கத்துக்கு கொண்டுவர முயற்சிப்பது அவர்களது மூளையில் பாதிப்பை உண்டாக்கும். இதுபோல, கஷ்டப்பட்டு கைப்பழக்கம் மாற்றப்பட்டால் அவர்களுக்கு மறதி பிரச்சனையும் ஏற்படலாம்.

இடதுகைப் பழக்கம் கொண்ட அனைவரும் புத்திசாலிகள் என்ற பரவலான கருத்து தவறானது என கருதப்பட்டாலும், உலக அளவில் இடதுகைப் பழக்கம் கொண்டவர்களில் பெரும்பானமையினர் புத்திசாலியாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹாலிவுட் பிரபலங்கள் ஏஞ்சலினா ஜோலி, டாம் குரூஸ் உட்பட பலரும் இடதுகைப் பழக்கம் கொண்டவர்களே!

Post a Comment

0 Comments