Subscribe Us

மீண்டும் அரசியல் தொடர்பில் ஆரூடம் கூறப்போவதில்லை: மஹிந்தவின் ஆஸ்தான சோதிடர்


அரசியல் தொடர்பில் இனி ஒரு போதும் ஆருடம் கூறப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடர் சுமனதாஸ அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இந்நாட்டு ஆளும் கட்சிக்கு எதிராக போட்டியிட்ட பிரதான வேட்பாளரை தவறாக புரிந்து கொண்டதனால் எனது ஆரூடம் பிழையாகி விட்டது.

இலங்கை வரலாற்றினுள் எதிரான வேட்பாளரை ஜனாதிபதி தேர்தல் வரையில் அறிந்துகொள்ள முடியாதிருந்த ஒரே தேர்தல் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலாகும்.

1994ஆம் ஆண்டு ஆரம்பித்த எனது அரசியல் தொடர்பில் ஆரூடம் கூறும் பயணத்தில் தவறாகிய ஒரு சந்தர்ப்பமும் இதுவாகும்.

அதனால் மீண்டும் அரசியல் தொடர்பில் ஆரூடம் கூறப்போவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments