லேப்டாப் அளவில், பைக்குள் வைத்துக்கொண்டு செல்லும் அளவுக்கு சிறிய ‘வாக் கார்’-ஐ உருவாக்கி ஜப்பானிய என்ஜினீயர் சாதனை படைத்துள்ளார்.
குனியாக்கோ சைடோ (26) என்ற அந்த என்ஜினீயர், கோக்கோவா மோட்டாரில் உள்ள தனது குழுவுடன் இந்த சாதனத்தை அறிமுகப்படுத்தினர். செல்போன்களைப் போல லித்தியம் பேட்டரியில் இயங்கும் இந்த சாதனம், மூன்று மணி நேர பேட்டரி சார்ஜுக்கு பிறகு நம்மை 12 கிலோ மீட்டர் தூரம் வரையில் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 120 கிலோ எடை வரை இந்த போட்டால் சுமக்க முடியும்.
இதன் மீது ஏறி நின்றவுடன் இது நகர ஆரம்பிக்கும். 10 கிலோ மீட்டர் வேகம் வரை இதனால் பயணிக்க முடியும். இதிலிருந்து இறங்கினாலே இது தானே நின்று விடும். இதில் பயணிப்பவர் தனது கால்களை சற்று தூக்கி, இறக்குவதன் மூலம் இதைத் திருப்பிக் கொள்ளலாம்.
இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ‘வாக் கார்’, கிரவுட் ஃபண்டிங் இணையமான ‘கிக்ஸ்டார்ட்டர்’ மூலமாக விற்கப்படும். இது 800 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 Comments