Subscribe Us

வைரல்: சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பின இளைஞரின் மனதை கணக்கவைக்கும் டுவிட்...



ஒரு கருப்பினத்தவர் நாட்டின் அதிபராக இருந்த போதும் அமெரிக்காவில் கருப்பின மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. 

கிரிஸ்டியன் டெய்லர் என்ற 19 வயது கருப்பின இளைஞர், கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாண காவல்துறையை சேர்ந்த போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  டெய்லர் தனது காரை மற்றொரு காருடன் மோதியதை தொடர்ந்து  பிரச்சனை ஏற்பட்டது. இதனை அடுத்து, போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொள்ள முயன்ற போது ஆயுதங்கள் எதுவும் வைத்திறாத டெய்லர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சுட்டுக்கொல்லப்பட்ட கிரிஸ்டியன் டெய்லர் கருப்பினத்தவர்கள் சுட்டு கொல்லப்படுவதற்கு எதிரான இயக்கங்களில் செயல்பட்டு வந்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். 

கிரிஸ்டியன் டெய்லர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக “நானும் இளம்வயதில் சாக விரும்பவில்லை” என்று டுவிட் செய்துள்ளார். தற்போது அவரது மரணத்திற்கு பிறகு அந்த டுவிட் ஆயிரக்கணக்கானவர்களால் பகிரப்பட்டு வைரலாக மாறிவருகிறது.

இளம் வயதிலேயே போலீசால் சுட்டுக்கொல்லப்பட விரும்பவில்லை என்று கூறிய இளைஞர், ஒரு வாரத்திற்குள்ளாகவே போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டதை என்னவென்று சொல்வது. 

Post a Comment

0 Comments