தமது ஆட்சியில் நாட்டை விட்டு வெளியேறியிருந்த பாதாள உலகக் குழுவினர் தற்போதைய ஆட்சியின் போது மீண்டும் நாட்டுக்கு திரும்பிவிட்டனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த பாதாள உலகக் குழுவினர் அரசியல்வாதிகளின் நிமித்தமே நாட்டுக்குள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது ஆட்சியின் போது 10க்கும் 12க்கும் உட்பட்ட பாதாள உலக தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
எனினும் பொதுத்தேர்தல் பிரசாரங்களுக்காக அவர்கள் தற்போது அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமது ஆட்சியின் போது தலைமறைவாகியிருந்த பாதாள உலகக் குழுவினர் தற்போது தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதை காண முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை கொட்டாஞ்சேனை புளுமெண்டல் சம்பவம் உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த சம்பவத்துக்கு தம்மீது அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியமை குறித்த கருத்துரைத்த மஹிந்த, பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவே தாம் இந்த சம்பவத்தில் தொடர்புபடவில்லை என்பதை கூறியுள்ளதாக குறிப்பிட்டார்.


0 Comments