Subscribe Us

அமெரிக்காவில் இரட்டைக்குட்டிகளை ஈன்ற அரிய வகை பாண்டா கரடி...



வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய மிருகக்காட்சிசாலையில் உள்ள பாண்டா ஒன்றுக்கு இரட்டைக் குட்டிகள் பிறந்துள்ளது. 

கடந்தவாரம் நடத்தப்பட்ட அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில்தான் மேய் சியாங் என்ற பெயருடைய இந்த பெண் பாண்டா கர்ப்பமாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, உலகில் அருகிவரும் உயிரினங்களில் ஒன்றான அந்த பெரிய பாண்டா கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டது. 

இந்நிலையில், அந்த பாண்டாவுக்கு இரட்டைக்குட்டிகள் பிறந்துள்ளதாகவும், இரண்டு குட்டிகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஒரு குட்டி மட்டும் இன்குபேட்டர் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வகை பாண்டா இனப்பெருக்கம் செய்வது என்பது மிகவும் சிரமான காரியம் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments