Subscribe Us

ஆண்டுக்கு ரூ. 1.30 கோடி செலவு செய்து நாசா மேற்கொள்ளும் வினோத ஆராய்ச்சி...



அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, விண்வெளியில் நிண்ட நாட்கள் தங்கும் வீரர்களுக்கு பயன்படும் வகையில் மனிதக் கழிவை மறுசுழற்சி செய்து எப்படி உணவாக மாற்றலாம் என்பது தொடர்பான ஆய்வுக்கு நிதியுதவி அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.

தென் கரோலினாவில் உள்ள கிளிம்சன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட உள்ளனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் அமெரிக்க டாலர் என்ற விகிதத்தில் மூன்று ஆண்டுகள் நிதியுதவி செய்ய அமெரிக்க விண்வெளி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நாசா வரும் 2030 செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை தரையிறக்க திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியிருப்பதற்கு உணவு தடையாக உள்ளது. இந்த ஆய்வு வெற்றி பெற்றால் விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்ய முடியும்.

Post a Comment

0 Comments