அந்த இதயம் சுமார் 76 அடி நீளமுள்ள ஒரு நீலத் திமிங்கலத்துடையது. ஐந்துக்கு நான்கு அடி இருக்கும் அந்த இதயத்தின் எடை சுமார் 180 கிலோ. இது கனடாவின் நியூபவுண்ட்லேண்ட் கடற்கரையில் ஒதுங்கிய, ஐஸ்கட்டியால் படர்ந்த நீலத் திமிங்கலத்திலிருந்து எடுத்து பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகச் சில நீலத் திமிங்கலங்களின் இதயம் இதுபோல பதப்படுத்தப்பட்டுள்ளது. அவையனைத்தையும்விட, இருவர் மட்டும் அமர்ந்து செல்லும் கார் அளவில் உள்ள இந்த இதயமே மிகப்பெரியது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்த இதயம் ஒவ்வொரு துடிப்பின்போதும் சுமார் 220 லிட்டர் ரத்தத்தை இது பாய்ச்சும் சக்தியைக்கொண்டது என நீலத் திமிங்கலம் சார்ந்த ஆராய்ச்சிகளை செய்துவரும் குழுவிலுள்ள ஜாக்குலின் மில்லர் என்னும் பாலூட்டிகளின் வல்லுனர் தெரிவித்தார்.
இதுபோன்ற நீலத் திமிங்கலத்தின் நாக்கு மட்டும் யானையின் எடைக்கு இணையாக இருக்கும் என மற்றொரு அதிர்ச்சித் தகவலை நேஷனல் ஜியாகிரபி இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்த நீலத் திமிங்கல இதயத்தின் அகலத்தை அறிய வீடியோவைக் காண்க!


0 Comments