வாசி பார்த்து வரவு பார்த்து இறுதி நேரத்தில் அவசர முடிவெடுக்கும் அரசியல் வேதாந்திகளை விட நீண்ட நாள் முயற்சிக்கும் முன்மாதிரி இளைஞ்சர்கள் நீங்கள். இறுதி முடிவுகள் தளம்பலில் முடிந்து விட்டது ஒரு சோதனையே. சம்பிரதாய அரசியல் மேடைப்பேச்சுக்கள் உங்களில் தொற்றிக்கொண்ட பலவீனமே. அடுத்த முறை பலவீனங்களை களைய முயற்சிப்பீர்களாக.
இம்முறை எங்களின் வாக்கு மாற்று அரசியல் சிந்தனைக்கே. வென்றுவிட்டால் உங்களுக்கு இரண்டு வெற்றி. பிரதிநிதி என்ற வெற்றியும் மாற்று சிந்தனை என்ற வெற்றியும். பிரதிநிதி வராவிட்டால் உங்களுக்கு ஒரு வெற்றி. சிந்தனை மாற்றத்தை முன்வைத்து முயற்சி செய்தீர்கள் என்ற ஒன்றே அது. இந்த ஒரு வெற்றி அடுத்த தேர்தலின் போது இரு வெற்றிகளுக்கு முழுப்பலம் சேர்க்கும் இன்ஷா அல்லாஹ். மக்களிடத்தில் முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைக்கும் இன்ஷா அல்லாஹ்.
பத்திரிகைகளினதும் தனி நபர்களினதும் எதிர்வு கூறல்களை உச்சாகமூட்டலாக எடுத்துக்கொள்ளுங்கள் உத்தரவாதமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.
-Imthath Basar-
-Imthath Basar-


0 Comments