Subscribe Us

header ads

எமக்கு பிர­தமர் பதவி வேண்டாம்

பிர­தமர் பத­வியின் உண்­மை­யான உரி­மை­யா­ள­ராக மஹிந்த ராஜ­ப­க் ஷவே காணப்­ப­டு­கின்றார். எனவே, பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் மஹிந்த ராஜ­ப­க் ஷவை பிர­த­ம­ராக நிய­மிக்­க­வேண்டும் என்­பதே எமது யோசனை என்­ப­துடன் எதிர்வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மக்கள் ஆணைக்கு மதிப்­ப­ளிக்­கு­மாறு உங்­க­ளையும் கோரு­கின்றோம் என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

சுதந்­திரக் கட்­சியில் பிர­தமர் பத­விக்கு தகு­தி­யா­ன­வர்கள் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள ஏழு பேரில் ஆறு பேர் கையொப்பம் இட்டு இந்தக் கடி­தத்தை அனுப்­பி­யுள்­ளனர்.

நிமல் சிறி­பால டி சில்வா ஜோன் சென­வி­ரத்ன சமல் ராஜ­பக்ஷ அதா­வுத சென­வி­ரத்ன சுசில் பிரேம்­ஜ­யந்த அநு­ர­பி­ரி­ய­தர்­சன யாப்பா ஆகியோர் ஜனா­தி­ப­திக்கு இந்தத் கடி­தத்தை அனுப்­பி­யுள்­ளனர். ஆனால் பிர­தமர் பத­விக்கு பெயர் பரிந்­து­ரைக்­கப்­பட்ட ஏ.எச்.எம். பெளசி இதில் கையொப்பம் இட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
அந்தக் கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது நீங்கள் மஹிந்த ராஜ­பக்­க்ஷ­வுக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வெற்­றி­பெறும் என்று தெரி­வித்­துள்­ள­மைக்கு நன்றி தெரி­விக்­கின்றோம்.
பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் இந்த தேர்­தலை வழி நடத்­திய மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக நிய­மிக்­க­வேண்டும் என்று நாங்கள் ஆரம்­பத்­தி­லி­ருந்தே கூறி­வ­ரு­கின்றோம். தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­க­ளிலும் இதனை கூறி­வந்தோம். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வெற்­றி­பெ­று­வ­தற்­கான பிர­தான கார­ணி­யாக இது அமைந்­துள்­ளது.
பிர­தமர் பத­விக்­காக சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து சில சிரேஷ்ட உறுப்­பி­னர்­களின் பெயர்­களை முன் மொழிந்­துள்­ளீர்கள். ஆனால் பிர­தமர் பத­வியின் உண்­மை­யான உரி­மை­யா­ள­ராக மஹிந்த ராஜ­ப­க்ஷவே காணப்­ப­டு­கின்றார். இது கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளி­னதும் எமதும் நிலைப்­பா­டாகும். எனவே பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவை பிரமதராக நியமிக்கவேண்டும் என்பதே எமது யோசனை என்பதுடன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்குமாறு உங்களையும் கோருகின்றோம்.

Post a Comment

0 Comments