Subscribe Us

இலங்கை வரலாற்றில் மஹிந்தவை போன்று பதவி ஆசை பிடித்தவரை பார்த்ததில்லை: கயந்த


மஹிந்த ராஜபக்ச அளவிற்கு பதவி மீது பேராசை கொண்டவரை இலங்கை வரலாற்றில் பார்த்தது கிடையாது என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எமது நாட்டின் ஏனைய ஜனாதிபதிகள் இரண்டு தடவைகள் பதவி வகித்து கௌரவத்துடன் ஓய்வு பெற்றுக்கொண்டனர்.

ஜே.ஆர்.ஜயவர்தன, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகிய ஜனாதிபதிகள் அவ்வாறே செய்தனர்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்து மீளவும் பிரதமராக முயற்சிக்கின்றார்.

மஹிந்தவிற்கு பிரதமர் பதவி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

பிரதமர் கனவு தகர்க்கப்பட்டதன் பின்னர், மஹிந்த தென் மாகாணசபையின் முதலமைச்சர் பதவிக்காக நிச்சயம் போட்டியிடுவார்.

அதிலும் தோல்வியைத் தழுவி இறுதியில் பிரதேச சபையின் தலைவர் பதவிக்காகவும், மெதமுலன கூட்டுறவு சங்கத்தின் தலைமைப் பதவிக்காகவும் போட்டியிடுவார் என கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கயந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments