மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் தலதா மாளிகைக்கு முன்னால் மோட்டார் பந்தயம் நடத்தியது யாரென்பது தனக்கு தெரியாதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் இல்லத்தின் பெயர் மாத்திரமே கார்ல்டன் அதனை தவிர மோட்டார் பந்தயம் நடத்தியது யாரென்பது எனக்கு தெரியாது.
பௌர்ணமி தினங்களில் விகாரைக்கு செல்வது, இறைச்சி, மீன் சாப்பிடாமல் இரவு நேர விடுதிகளுக்கு செல்லாமல் இருந்தமையினால் எனக்கும் எனது சகோதரர்களுக்கும் எதிராக போலியான குற்றசாட்டுகளை சுமத்துகின்றார்கள்.
விகாரைக்கு முன்னால் மோட்டார் பந்தயம் நடத்தியதாக குற்றச்சாட்டுக்கள் மாத்திரமே சுமத்தப்பட்டன எனினும் அதனை இன்று வரையில் நிரூபிக்கவில்லை.
தலதா மாளிகைக்கு முன்னால் மோட்டார் பந்தயம் நடத்தியது நாங்கள் அல்ல என்பதனை 100க்கு 100 வீதம் என்னால் உறுதியாக கூற முடியும்.
தலதா மாளிகைக்கு முன்னால் மோட்டார் பந்தயம் நடத்தியது நாங்கள் என மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளினால் புனையப்பட்ட ஒரு கட்டு கதையாகும்.
லெம்போகினி கார்களை போன்று தான் இதுவும் லெம்போகினி கார்கள் எங்கு என்று தான் தெரியவில்லை என்று நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments