யாழ் தேர்தல் தொகுதியில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றி ஈட்டிய ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரனை சந்திக்க சென்ற யாழ் முஸ்லீம் மக்களை திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது.
8 ஆவது பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் அதிஷ்டத்தில் வென்ற விஜயகலா மகேஸ்வரனை சந்திப்;பிபதற்காக சென்ற மற்றுமொறு அக்கட்சி வேட்பாளர் சுல்தான் றகீம் தலைமையிலான மக்கள் குழு விஜயகலா மகேஸ்வரனின் உத்தியோக பூர்வ இல்லத்தில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களாக காக்க வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக அதிருப்தி அடைந்த குழுவினர் தாம் அவமதிக்கப்பட்டு அனுப்பப்பட்டதாக அங்கு சென்ற ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தெரிவித்த கருத்துப்படி நடைபெற்ற தேர்தலில் இம்மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்ட ஒரே ஒரு முஸ்லீம் வேட்பாளர் சுல்தான் றகீம் என்பவர் 1437 விருப்பு வாக்குகளை பெற்றதன் காரணமாக அக்கட்சி 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற முடிந்தது.எனினும் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரைக்கும் விஜயகலா மகேஸ்வரனின் வெற்றி என்பது திரிசங்கு நிலையிலே இருந்தது.இதனால் அவர் வாக்கு என்னும் நிலையத்தில் தனது ஆதரவாளர் சகிதம் கவலையுடன் காணப்பட்டார்.ஆனால் எமது முஸ்லீம் வேட்பாளரின் விருப்பு வாக்குகள் அவருக்கு வெற்றி வாய்ப்புகளை வழங்கியது.அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒரு ஆசனத்திற்கு 6 வாக்குகள் குறையவே இந்த வெற்றி வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து முஸ்லீம் வேட்பாளர் றகீம் தலைமையில் விஜயகலா மகேஜ்வரனின் இணைப்பாளருடன் தொடர்பினை ஏற்படுத்தி அவரை சந்திப்பதற்காக சென்றிருந்தோம்.ஆனால் அங்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஒன்றரை மணி நேரமாகியும் விஜயகலா மகேஸ்வரனை சந்திக்க முடியவில்லை.இணைப்பாளர்கள் என சொல்லப்பட்ட இரு நபர்கள் வந்து றகீம் தலைமையிலான குழுவிடம் அக்கா நித்திரை செய்வதாகவும் அவரால் உங்களை சந்திக்க முடியாது எனவும் கூறினார்.மற்றுமொரு இணைப்பாளர் அக்கா வெளியே சென்றிருப்பதாகவும் வேறு ஒரு தினத்தில் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறி திரும்பி போகுமாறு கூறினார்.
இத்தனைக்கும் அவ்வலுவலகத்தில் ஒன்றரை மணித்தியாலங்களாக நின்ற முஸ்லீம் மக்களிற்கு ஒரு துளி தண்ணீர் கூட வழங்கப்படவில்லை.மாறாக தேர்தல் பிரச்சார காலத்தில் முஸ்லீம் பகுதியில் விஜயகலா மகேஸ்வரனிற்கு எதிராக விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரமே எடுத்து காட்டப்பட்டது.
இதன் போது இணைப்பாளர் விஜயகலாவினை சந்திக்க வந்த முஸ்லீம் வேட்பாளர் தலைமையிலான மக்களிடம் இத்துண்டுப்பிரசுரத்திற்கு என்ன அர்த்தம்,இதனால் தான் எமது அக்காவிற்கு உங்கள்ட சனம் வாக்களிக்க வில்லை என சுட்சுமமாக தெரிவித்தார்.
ஆனால் வேட்பாளர் றகீம் தலைமையிலான குழு இத்துண்டுப்பிரசுரம் காலதாமதமாக வெளியிடப்பட்டதாகவும் சரியாக மக்கள் மத்தியில் இத்துண்டுப்பிரசுரம் எடுபடவில்லை எனவும் அடித்து கூறி தனக்கு 1437 விருப்பு வாக்குகள் இடப்பட்டுள்ளது அது போன்று உங்களிற்கும் எமது மக்கள் இட்டுள்ளனர்.இதனால் தான் நீங்கள் (அக்கா) வெற்றி பெற சந்தர்ப்பமாக அமைந்தது என கோடிட்டு காட்டிவிட்டு வெளியேறி சென்றார்
-Farook Sihan-




0 Comments