பயன்தரும் பாகங்கள்: கிழங்கு.
வேறு பெயர்கள் -: முத்தக்காசு, எருவை, கோரா, கோரைக்கிழங்கு முதலியன. இதில் சிறு கோரை, பெருங்கோரை
என இரு வகையுண்டு.
கோரை ஒரு புல் இனத்தைச் சேர்ந்தது இதன் தாயகம் ஆப்பிரிக்கா, தென் ஆசியா, தென் மற்றும் மத்திய ஐரோப்பா, பிரான்ஸ், சைனா மற்றும் இந்தியாவுக்குப் பரவிற்று.
மருத்துவப்பயன்கள்
கோரைக்கிழங்கு சிறுநீர், வியர்வை ஆகியவற்றைப் பெருக்குதல், உடல் பருமனைக் குறைத்து தாது வெப்பு அகற்றி பலமுண்டாக்குதல், இதயம், மூளை, வயிற்றுக்கு சக்தி, மாதவிடாய் தொல்லை, காய்ச்சல், வாயுத்தொல்லை குணமடையச் செய்தல், கர்ப்பபை கோளாறு குணப்படுத்துதல், மார்பு வளர்ச்சி மற்றும் தாய் பால் சுத்தம் செய்தல் ஆகியவை செய்யும்.
கிழங்கு சூரணம் 1 கிராம் காலை, மாலை தேனில் கொள்ள புத்திக்கூர்மை, தாதுவிருத்தி, பசித்தீவனம், உடற்பொலிவு உண்டாகும்.
கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்படாகம், பிரமட்டை, சுக்கு ஒவ்வொன்றிலும் 5 கிராம் சிதைத்து 500 மி.லி. நீரில் போட்டு 125 மி.லி.யாகக் காய்ச்சிக் காலை, மாலை கொடுத்து வரத் தாகத்துடன் கூடிய காய்ச்சல் நீங்கும்.
கிழங்கை குடிநீர் செய்து காய்ச்சிய பாலில் சேர்த்து மோராக்கி அதில் உணவு கொள்ளக் குழந்தைகளுக்குக் காணும் பசியின்மை செரியாமை தீரும்.
இஞ்சியும் கோரைக் கிழங்கையும் நன்கு தேன் விட்டு அரைத்து ஒரு சுண்டைக்காயளவு கொடுத்தால் சீதபேதி குணமாகும்.
பச்சைக்கிழங்கை அரைத்து மார்பின் மீது பற்றுப்போட்டால் குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்கும். தேள் கடி, குளவிக் கடி ஆகியவைகளுக்குப் பற்றிட்டால் குணமாகும். இதை உடல் மீது பூசினால் வியர்வை நாற்றம் வராது.
குழந்தைகளுக்கும், குழந்தை பெற்ற பச்சை உடம்பு பெண்களுக்கும் குடிக்கக்கொடுக்கக்கூடாது. சித்த மருத்துவரின் ஆலோசனைப் படி செய்ய வேண்டும்
கோரைக்கிழங்குப் பவுடரை அரை தேக்கரண்டி வீதம் காலையும் இரவும் உணவுக்கு முன் நீர் அல்லது பால் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, வயிற்றுப்போக்கு நீங்கும்.
0 Comments