Subscribe Us

header ads

லண்டன் பள்ளி தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்ற மலாலா



பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் ரூபத்தில் எமனை நேருக்குநேர் சந்தித்து உயிர்பிழைத்த மலாலா யூசுப்சாய், அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் 'ஏ* மற்றும் ஏ கிரேட்' மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

பெண்கள் கல்வி கற்கக்கூடாது என்பதை வலியுறுத்திய தலிபான்களின் அடக்குமுறையை எதிர்த்து போராடிய 17 வயது பெண்ணான மலாலா துப்பாக்கியால் சுடப்பட்டார். மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர், மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பின் உயிர் பிழைத்து, பெண்களின் கல்விக்காக போராடி வருகிறார். 

பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கிக்குண்டுகளை பரிசாக பெற்ற போதும், துளியும் அச்சமின்றி தொடர்ச்சியாக பெண் கல்விக்காக குரல் கொடுத்த மலாலா 2014-ம் ஆண்டு நோபல் பரிசை வென்றார். 

லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக பள்ளியில் மலாலாவின் தந்தைக்கு வேலை வழங்க முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களின் குடும்பம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் நகரில் வசித்து வருகின்றது. 

இங்குள்ள பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றுவரும் மலாலா, கணிதம், இயற்பியல், தாவரவியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மதிப்பெண் தரவரிசையில் ஆறு 'ஏ* கிரேட்' மற்றும் நான்கு 'ஏ கிரேட்' ரேங்குகளை பெற்றுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Post a Comment

0 Comments