பிரபல ஹாலிவுட் சூப்பர் ஹிரோவான பேட்மேன் போல் உடையணிந்துக்கொண்டு நோயுற்ற குழந்தைகளை மகிழ்வித்து வந்த உண்மையான பேட்மேன் எதிர்பாராத விதமாக விபத்தில் மரணம் அடைந்தார்.
லென்னி ராபின்சன் 51 வயதான அமெரிக்கர் சூப்பர் ஹிரோவான பேட்மேன் போல் உடை மற்றும் பேட்மொபைல் எனப்படும் வாகனத்தில், வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் இருக்கும் நோயுற்ற குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இவரின் இந்த செயலால் நாடு முழுவதும் மிகவும் விரும்பப்படும் நபராக இருந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிறு இரவு லென்னி ராபின்சன் தனது பேட்மொபைல் வாகனத்தில் குழந்தைகளை பார்க்க சென்ற போது விபத்தில் சிக்கி, அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


0 Comments