Subscribe Us

header ads

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கொழும்பில் போராட்டம்

தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் தெரிவாகியுள்ள ஹிஸ்புல்லாவுக்கு எதிராக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று காலை கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டது.
இதன்போது ஹிஸ்புல்லாஹ்வின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் அப்துல் ரஹ்மானினால் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
ஹிஸ்புல்லாவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பதவி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றைய தினம் மாலை காத்தான்குடியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லாவின் ஆதராவர்கள் தாக்குதல்களை மேற்கொண்டதாக பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
– படங்கள் : முஜிபுர் ரஹ்மான் –
-Daily Ceylon-
0102

Post a Comment

0 Comments