அல்லாஹ்வுடைய அபய பூமியும், உலக முஸ்லிம்களின் புனித பூமியுமான கஅபா ஆலயத்தை சுற்றி எந்நேரமும் லட்சக்கணக்கான மக்கள் இருப்பதை காணலாம்.
இந்த புனித ஆலயத்தின் தனி சிறப்பு என்ன தெரியுமா ?
1. எந்த நுழைவுக் கட்டணமும் இல்லை,
2. VIP களுக்கு என்று தனி வழி இல்லை,
3. VIP கள் வருகிறார்கள் என்பதற்காக எந்த வழியையும் அடைப்பதில்லை,
4. எல்லோருக்கும் ஒரே வழிதான் யார் எங்கு வேண்டுமானாலும் அமரலாம், யார் வேண்டுமானலும் முதலில் வரலாம் & செல்லலாம்.
5. VIP களுக்கு என்று தனி இருக்கை இல்லை,
6. முதலில் வருபவர் முன்னால் அமரலாம், தாமதமாக ஆட்சியாளர்களே வந்தாலும் ரோட்டில் தான் அமர வேண்டும்.
8. சாலைப் பணியாளரோடு சேர்ந்து அந்நாட்டு ஆட்சியாளர்கள் அமர்ந்திருப்பார்.
9. ஏழைப் பணக்காரன் என்ற பாகுபாடு அங்கில்லை,
10. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடும் அங்கில்லை,
11. வெள்ளையன் கருப்பன் என்ற நிறப் பாகுபாடும் அங்கில்லை,
12. மொழிப் பாகுபாடும் இல்லை,
13. உலக சமத்துவம் மற்றும் சமாதானத்தின் ஒரே வாழ்இடம்,
தகவல் உதவி : ஹாஜா முஹைதீன்
0 Comments