நீங்கள் ஒவ்வொருவரும்
கட்சியால் வேறுபட்டிருக்கலாம்
இலக்கத்தால்
மாறுபட்டிருக்கலாம்..
ஆனால் எங்கோ ஓர் மூலையில்
இரத்த சொந்தங்கள்
பதறியடித்து ஓடி வரும்
ஒருவனுக்கு ஒன்றென்றால்
தாய் வீட்டு மக்கள்
ஒரு நாள் நடந்து முடியப் போகும்
தேர்தலுக்காய் பிரச்சார மேடைகளை
அம்பலப்படுத்துவதாயும்
அடுத்தவன் வீட்டு சேதிகளை
அவமானப்படுத்துவதாயும்
ஆக்கிக் கொள்ளாதீர்கள்..
நாளையும் உங்களுக்கு ஒன்று ஆகலாம்
பதறியடித்து ஓடி வந்து
அவர்கள் தான் வேண்டும்
தூக்கி உதவி செய்ய
நாவை அடக்கி..
உறவைப் பேணி..
தூய அரசியல் செய்வோம்..
வாரீர்..
இவன் உங்கள் சொந்தம்
Nusry Ibn Rahmathullah
கல்பிட்டி நியூஸ் இற்காக
புத்தளத்திலிருந்து
நுஸ்ரி.


0 Comments