Subscribe Us

நீர்த்தேக்கத்தில் 9.6 கோடி கறுப்பு பந்துகளை மிதக்க விட்டு நீரைக் காக்கும் கலிபோர்னியா

கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சில்மர் நீர்த்தேக்கத்தின் நீர் வேகமாக ஆவியாவதைத் தடுக்க புதிய யுக்தி ஒன்று கையாளப்பட்டுள்ளது.
இந்த நீர்த்தேக்கம் முழுவதும் கறுப்பு நிற பிளாஸ்டிக் பந்துகளால் நிரப்பப்பட்டுள்ளன. 9.6 கோடி கறுப்பு நிற பிளாஸ்டிக் பந்துகள் இந்த நீர்த்தேக்கத்தில் கொட்டப்பட்டுள்ளன.
இதனால், தண்ணீர் இருப்பதே வெளியில் தெரியாத அளவிற்கு கறுப்பு பந்துகளாக இந்த நீர்த்தேக்கம் காட்சியளிக்கிறது.
இதன் மூலம் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கப்படுகிறது. மேலும், அழுக்கு, இரசாயனம் போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கப்படுகிறது.
இந்த பிளாஸ்டிக் பந்துகள் மூலம் ஓராண்டுக்கு 1135 லிட்டர் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களையும் தண்ணீருக்குள் ஊடுருவ விடாமல் இந்தப் பந்துகள் தடுத்து விடுகின்றனவாம்.
baloons 4
baloons 2
baloons 5

Post a Comment

0 Comments