Subscribe Us

header ads

75 வயதாகும் சகோதரியை முதல்முறை சந்திக்க பத்தாயிரம் மைல் பயணித்து வந்த அண்ணன்...



இங்கிலாந்தின் கோவென்ட்ரி நகரைச் சேர்ந்த ஸில்வியா(75) குடும்ப வறுமையால் குடும்பத்தைவிட்டுப் பிரிந்துபோன சகோதரன் பில்லை(93) சமீபத்தில் சந்தித்தார்.

குழந்தைகள் புலம்பெயர் திட்டத்தின்கீழ் 1934-ம் ஆண்டு இயாலாமையால் தவித்த பெற்றோரின் ஆர்த்தர், பில் என்கிற இரண்டு மகன்கள் அரசாங்கத்தால் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே விவசாயம் கற்றுத் தரப்பட்டு, விவசாயக் கூலியாக யாரேனும் தம்மை கூப்பிட மாட்டார்களா? என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இன்னொருபுறம், 1940-களில் குடும்ப நிலைமை சீராகத் தொடங்கியது. எனினும், பிரிந்துபோன அந்த சகோதரர்கள் எவ்விதத்திலும் குடும்பத்துடன் சேர வாய்ப்பில்லாமல் போனது. அந்த சகோதரர்களுக்கு விவசாய வேலையும் கிடைக்காத நிலையில், ராணுவத்தில் சேர முடிவெடுத்தார் இளைய சகோதரர் பில். 

ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த மூத்த சகோதரரும் இறந்துபோன நிலையில், பில் சமீபத்தில் தன்னை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்த அந்த திட்டக்குழுவிடம் உயிருடன் இருக்கும் தனது குடும்ப உறுப்பினர்களைப்பற்றி விசாரித்தார். அதில், ஸில்வியா என்கிற அவரது தங்கை தற்போதும் சொந்த ஊரிலேயே வசித்து வருவது தெரியவந்தது.

அவரது சகோதரியின் தொலைபேசி எண்ணைக் கண்டறிந்து அவருடன், பேசத் தொடங்கினார். முதல்முறையாக சமீபத்தில் தனது ஒரே சகோதரியை நேரில் சந்தித்து பழக பத்தாயிரம் மைல் பயணித்து வந்தார் சகோதரன் பில். பில் தனது பன்னிரெண்டு வயதில், வீட்டைவிட்டு புறப்பட்டுவிட்டார். இதனால், இவருக்கு ஸில்வியா என்கிற சகோதரி பிறந்ததே தெரியாமல் போனது. இவ்வளவு ஆண்டுகளைக் கடந்த பின்னர் தங்களது சிறு வயது தொடங்கி தற்போதைய கதை வரை அனைத்தையும் சேர்த்து பேசி மகிழ்ந்தனர். 

Post a Comment

0 Comments