Subscribe Us

மாகாண முதலமைச்சர்கள் செப்டம்பர் 4ம் திகதியின் பின்னர் தெரிவு செய்யப்படுவர்


நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்லும் முதலமைச்சர்களுக்கு பதிலாக புதிய முதலமைச்சர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

இந்த தெரிவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதியின் பின்னரே இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்ல உள்ளார்.

ஊவாமாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்லவுள்ளார்.

அதேபோன்று வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்லவுள்ளார்.

Post a Comment

0 Comments