Subscribe Us

18ம் திகதி வரையும் அரச நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்கக் கூடாது: மஹிந்த தேசப்பிரிய


எதிர்வரும் 18ம் திகதி வரையில் அரச நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்க மாகாணசபை அல்லது உள்ளூராட்சி மன்றங்களின் எந்தவொரு திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுதல், அங்குரார்ப்பணம் செய்தல் அல்லது வேறு நிகழ்வுகளில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பங்கேற்கக் கூடாது.

ஏதேனும் ஓர் காரணத்தினால் இவ்வாறு நிகழ்வு ஒன்றில் வேட்பாளர் பங்கேற்கு அதன் ஊடாக கட்சிக்கோ வேட்பாளருக்கோ தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டமை நிரூபிக்கப்பட்டால் நிகழ்வினை ஏற்பாடு செய்த அரச அதிகாரி அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நிகழ்வுகளின் மூலம் வேட்பாளர்கள் அடையக் கூடிய நன்மைகள் மற்றும் பிரச்சாரத்தை தடுக்கும்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாகாணசபை அமைச்சர்களின் செயலாளர்கள், அரச நிறுவன பிரதானிகள், திணைக்கள பிரதானிகள் உள்ளிட்டவர்களுக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று கருத்து வெளியிட்ட போது தேர்தல் ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments