அந்தரத்தில் நீந்த ஆசையா? இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் மாநகரின் மத்தியப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ‘ஸ்கை பூல்’ அந்த ஆசையை நிறைவேற்றும்.
இருபத்தைந்து மீட்டர் நீளத்திலும், ஐந்து மீட்டர் அகலத்திலும், மூன்று மீட்டர் ஆழமும் கொண்ட கண்ணாடி நீச்சல் குளத்தை நூற்றிப் பத்து அடி உயரத்தில், இரு பத்தடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு இடையே அருமையாக உருவாக்கியிருக்கின்றனர் நவீனகால என்ஜினீயர்கள்.
புதுமையாக எதையேனும் உருவாக்க நினைத்த அவர்களுக்கு இந்த தொங்கும் நீச்சல் குளம் அமைக்கும் எண்ணம் தோன்றியுள்ளது. கடந்த தசாப்த்தத்தை விட முன்னேறிய தொழில்நுட்பத்தால் இது சாத்தியமானதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும், இந்த நீச்சல் குளம் அந்தக் கட்டிடங்களில் குடியேறி இருப்பவர்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகையால், நாம் தூரத்திலிருந்து பார்த்தும், இதன் புகைப்படங்களை மட்டுமே ரசிக்க இயலும். இதில் நீந்தும்போது லண்டன் மாநகர தெருக்களை கண்டுகளிக்கலாம். நீச்சல் குளத்துடனேயே ‘ஸ்பா’ போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல் இது செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments