கடந்த ஜனவரி மாதம் 08ம் திகதி கிடைத்த வெற்றியினை மேலும் வலுவடைய செய்து ஒகஸ்ட் மாதம் 17ம் திகதி ஐக்கிய தேசிய கட்சிக்கு மகத்தான வெற்றியினை பெற்றுக்கொடுப்பதற்கு மக்கள் அணிதிரண்டுள்ளனர் என கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மல்வானையில் இடம்பெற்ற பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
ஐக்கிய தேசியக் கட்சியை சுற்றி முன்னணி ஆதரவாளர்கள் தினமும் கூடியிருப்பது ஐக்கிய தேசிய கட்சியின் உறுதியான வெற்றியினை அவர்கள் அறிந்தமையினாலேயே.
100 நாட்களில் நல்லாட்சி அரசாங்கம் இந்நாட்டு வரலாற்றில் என்றும் இல்லாதவாறு மக்களுக்கு சேவை செய்துள்ளது.
10 வருட ஆட்சி காலத்தினுள் மக்களுக்காக நன்மையான வேலைகள் எதுவும் செய்யாத மஹிந்த ராஜபக்ச தற்போது வாக்குறுதி பொதியொன்றினை வழங்கியவாறு நாடு முழுவதும் செல்கின்றார்.
இவ்வாறான பொய்யான வாக்குறுதிகளுக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள். எதிர்வரும் 17ம் திகதி இவ்வாறான பொய்களுக்கு மக்கள் நல்ல பதில் ஒன்றை வழங்குவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments