தன்மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெள்ளிக்கிழமை இரவு(14-08-2015) இரவு 10.00 மணி முதல் 11.30 வரை வசந்தம் தொலைக்காட்சியில் இடம் பெறும் அதிர்வு நிகழ்ச்சியில் பதில் அளிக்கின்றார்
|
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் அகில இலங்கை மக்கள் கங்கிரஸின் முன்னெடுப்புக்கள்.அத்துடன் தமக்கெதிராக சுமத்தப்பட்டுவரும் பொறுப்பற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளருமான றிசாத்ப பதியுதீன் கலந்து கொள்ளும்அதிர்வு தொலைக்காட்சி நிகழ்ச்சி நாளை வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணி முதல் 11..30 வரை வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது.
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கான விளக்கம்,அத்தோடு எதிர்வரும் தேர்தலில் தமது கட்சி வெற்றி பெரும் மாவட்டங்களின் விபரங்கள்,மற்றும் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடுவதன் மூலம் அடையப் போகும் நன்மைகள் தொடர்பில் இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் விளக்கமளிக்கவுள்ளார் என அமைச்சரின் தேர்தல் இணைப்பு அலுவலக பணிப்பாளர் எம்.சுபைர்தீன் ஹாஜியார் தெரிவித்தார்.
அதே வேளை மக்கள் மத்தியில் காணப்படும் பல்வேறு சந்தேகங்ளுக்கு பதிலை இந்த நிகழ்ச்சியை பார்ப்பதன் மூலம் பதிலை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.


0 Comments