Subscribe Us

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 09


1173: இத்தாலிய பைஸா கோபுர நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்டது. 

1942: இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்த மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டார். 

1945: ஜப்பானின் நாகசாசி நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. 74,000 பேர் பலியாகினர். 

1965: மலேஷியாவிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டது. 

1974: அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழல் காரணமாக ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் ராஜினாமா செய்தார். ஜெரால்ட் போர்ட் ஜனாதிபதியாக பதவியேற்றார். 

1991: யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் 2000ம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர். 

2006: திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 

Post a Comment

0 Comments