Subscribe Us

புத்தளத்தில் வாக்குகள் எண்ணப்படவுள்ள 03 முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை!


எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக புத்தளம் மாவட்ட வாக்குகளை எண்ணும் மூன்று பாடசாலைகள் இம் மாதம் 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளன.

புத்தளம் ஸாகிரா தேசிய பாடசாலை, பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம், செய்னம்ப் முஸ்லிம் பெண்கள் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளும் வாக்கு எண்ணும் நிலையங்களாக செயற்படவுள்ளன.


இதன் காரணமாகவே இந்த மூன்று பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளன. புத்தளம் சென்.அன்றூஸ் மத்திய கல்லூரி வழமையாக வாக்கு எண்ணும் நிலையமாக செயற்படுவது எனினும் தற்போது நடைபெற்று வரும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை நிலையமாக சென். அன்றூஸ் செயற்படுவதன் காரணமாகவே புத்தளம் ஸாகிரா தேசிய பாடசாலையில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

Post a Comment

0 Comments