Subscribe Us

header ads

குவைத் வாழ் சகோதரர்களுக்கு ஒரு நற்செய்தி! காதிம் visa-வில் வேலை செய்யும் நபர்களுக்கு உடனடியாக விடிவுகாலம் வருகிறது:




குவைத்தில் வீட்டு வேலை மற்றும் ஓட்டுநர் போன்ற வேலைக்கு வரும் நபர்களுக்கு பல கொடுமைகள் இழைக்கப்படுகிறது என்று புகார் எழுந்தது வந்த நிலையில் இந்த வேலைக்கு அனுப்பி வைக்கப்படும் ஏஜெண்டுகள் வேலைக்கு வரும் நபர்களுக்கு அவர்கள் சொல்லும் வேலை மற்றும் சம்பளமும் வழங்கப்படுவதும் இல்லை.



இதை தொடர்ந்து அரசு தேர்வு செய்த சில குறிப்பிட்ட சில ஏஜெண்டுகளை மட்டும் தேர்வு செய்து அவர்கள் மட்டுமே வேலைக்கு ஆள்களை தேர்வு செய்து அனுப்ப அனுமதி அளித்தது குவைத் அரசு புது சட்டம் நிறைவேற்றியது. இதன் படி 300 அதிகமாக போலி ஏஜெண்டுகள் ஆள் அனுப்புவதை தடுக்க முடியும்.



இதன் படி ஒரு நபருக்கு 8 மணி நேர வேலை அதற்கு மேல் வேலை செய்தால் Over time பணம் கொடுக்க வேண்டும், வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை, வருடத்திவருடத 30 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை மற்றும் குறைந்தது 45 குவைத் தினார்(KD) சம்பளமாக வழங்க வேண்டும் எனவும் வரையறை செய்து சட்டம் கொண்டுவரப்பட்டது.



இதை அரசின் ஒப்புதல் கிடைத்தும் இதுவரை நடைமுறையில் வரவில்லை. இதை தொடர்ந்து இந்த சட்டம் உடனடியாக செயல் படுத்த குவைத் வெளியுறவு துறை முடிவு செய்து உள்ளதாக அதன் அமைச்சர் தெரிவித்தாக ஒரு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.



இந்த திட்டம் நடைமுறையில் வருவதன் மூலம் ஒரு அளவு பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

Post a Comment

0 Comments