சம்மாந்துறை கூட்டத்தில் மக்கள் வெள்ளத்தையும் தாண்டி நடந்த சங்கதிகள் தெரியுமா? அந்த கூட்டம் கூடிய மர்மமும் துலங்கியது.சம்மாந்துறை மண்ணை சேர்ந்த வேட்பாளர்கள் இருவரும் ஆரம்ப இலக்கத்தையும் கடைசி இலக்கத்தையும் கொண்டவர்கள்.
இவர்களுக்கு நேருங்கிய சிநேகிதமும் தீராத பகையும் இருக்கிறது.தென்கிழக்கு பல்கலைகழகத்தில் துணை வேந்தராக இருந்த இஸ்மாயிலை அந்த இடத்திற்கு கொண்டுவர பாடு பட்டவர்களில் ஒருவர்தானாம் மயிலின் முதலாம் இலக்கம் . முதலாம் இலக்கம் பல்கலை கழக பேரவையில் உறுப்பினராக இருந்தவர்.என்பதையும் தாண்டி பேரவையின் நிதி சார் குழுவிலும் தலைவராக இருந்திருக்கிறார்.இது பல்கலை கழகத்தினோடு தொடர்பு பட்ட சகலருக்கும் தெரிந்த உண்மையே.
அந்த பேரவையில் லஞ்சம்,ஊழலை கடுமையாக எதிர்ப்பதில் முன்னின்டவர்தான் இந்த முதலாம் இலக்கம்.அதனையும் தாண்டி இவர் ஊடகங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்.சிறந்த முறையில் ஆக்ரோசமாக பேச கூடியவர் .தமிழ்,ஆங்கிலம்,சிங்களத்தை சரளமாக எழுத ,பேச ,வாசிக்க தெரிந்தவர்.
இந்த முதலாம் இலக்கம் பத்தாம் இலக்கத்தின் சகல ஊழல்களையும் நன்றாக தெரிந்து வைத்திருக்கும் ஒன்றாகும்.
இப்போ கதைக்கு வருவோம்.
தொகுதிக்கு ஒரு கூட்டமே போட முடிவு செய்த அமைச்சர் ரிசாத் அணி யார் யாருக்கெல்லாம் மக்கள் செல்வாக்கில் சற்று சரிவு இருக்கிறதோ அவர்களின் தலைமையில் கூட்டத்தை நடத்த பணித்தது.அந்த வகையில் பொத்துவிலில் அமைச்சர் அதவுள்ளஹ்வின் ஆதிக்கம் இருப்பதாலும் மஜீதின் வாக்கில் தளம்பல் இருப்பதால் அங்கும் சம்மாந்துறையில் மன்சூரின் ஆதிக்கம் இருப்பதாலும் இஸ்மாயிலின் வாக்கு சம்மாந்துறையில் மட்டுபடுத்த பட்டதால் சம்மாந்துறையிலும் கல்முனையில் ஹரீசின் ஆதிக்கத்தால் அங்கும் கூட்டம் ஏற்பாடாகியது.
நேற்றைய தினம் வருகை தந்த அமைச்சர் மாவட்ட காரியாலயத்தை திறந்து வைத்தான் பின்னர் சில பிரதேசங்களுக்கு பயணம் செய்தார்.அம்பாறை மாவட்டத்தில் கட்சி விஸ்தரிப்பில் சில மாதங்களாக சிட்டாக பறந்து ஆதரவு தேடிய அன்வர் எம் முஸ்தபா அடங்கலாக கட்சியின் வேட்பாளர்கள் சகலரும் கூடவே சென்றிருந்தனர்.
பல இடங்களில் தலைவருடன் சேர்த்து அன்வர் முஸ்தபாவையும் மக்கள் தொழில் சுமந்தனர்.இதனை கண்ட இஸ்மாயில் இற்கு சற்று ஏமாற்றம் அளித்தது.எல்லாம் முடிய சம்மாந்துறை கூட்டத்திற்கு வந்தார் தலைவர்.
ஊழலை நன்றாக தெரிந்த இவரும் ஊழலை வெளிக்காட்டிய அவருமாக சம்மாந்துறை மேடை கலை கட்டியது.
நேற்றைய கூட்ட அழைப்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட போது சந்திகளில் இவர்களை பற்றி நன்றாக தெரிந்த சிலர் இன்றை கூட்டத்தில் நல்ல முசுப்பாத்தி நடக்கும் என மக்களுக்கு தெளிவு படுத்த மக்களும் இவர்களது முசுப்பாத்தி பக்க வந்தனர். இருவரும் ஒரே மேடையில் இருக்கிறார்கள். இவரின் ஊழலை பற்றி அவர் என்ன சொல்ல போகிறார் என மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
சம்மாந்துறை மத்திய குழு நடாத்திய கூட்டத்தில் ஒருவருடைய விளம்பரம் மட்டுமே தான் இருந்தது.என்பதை கவனிக்கலாம். அப்போ மற்றையவரின் விளம்பரம் எங்கே? என மக்கள் தேடி விடை காண முதல் கூட்டம் ஆரம்பமானது.
சாய்ந்தமருதில் நடந்த திறப்புவிழாவில் ஆக்ரோசமாக பேசிய அன்வர் , சில இடங்களில் ஊழல் பற்றியும் பட்டும் படாமலும் பேசினார்.அதனை தொடர்ந்து பொத்துவிலில் மஜீத்துக்கு ஆதரவாக பேசிவிட்டு இந்த கட்சியை உங்களுக்கு அறிமுகம் செய்த என்னை ஆதரித்து பாராளுமன்றம் அனுப்புங்கள் என தயவாக மக்களை நோக்கி வினயமாக கேட்டார்.இவர் பேச வந்த போது வெடிசத்தங்கள்,மாலைகள் என மக்கள் இவரை ஆதரிக்க போவதை வெளிக்காட்ட முற்பட்டனர்.
இதனையும் தாண்டி இவர் கல்முனை தொகுதியில் பிறந்து பொத்துவில் தொகுதியில் வளர்ந்து சம்மாந்துறையில் திருமணம் செய்திருப்பவர்.சகல தொகுதியிலும் இவருக்கு வாக்கு கிடைக்கும் என்பதும் சாய்ந்தமருது,பொத்துவில் கூட்டங்களில் இவரது ஆக்ரோஷ உறையும் இஸ்மாயிலுக்கு தெளிவாக சொல்லியது இவர் இந்த மேடையில் ஏறினாள் கட்டாயம் தனது முகத்திரை கிளியும் என்று.
பீதியடைந்த இவர் உடனடியாக அன்வரை இந்த மேடையில் பேச விட கூடாது என ஒரு முடிவில் இருந்தார். அவருடன் சேர்த்து அன்வருக்கு ஆதரவு தெரிவிக்கும் மேலும் பலரையும் இந்த மேடையில் முடக்க முற்பட்டார்.முடக்கினார்.
சத்தியம் வெல்லும் என அன்வர் சகல இடத்திலும் சொல்லி வருவது இஸ்மைலை குறிவைத்தா ? என என்ன தோன்றுகிறது. மேடையில் அமர்ந்திருந்தும்.சம்மாந்துறையை சேர்ந்தவராக இருந்தும் பேச சந்தர்ப்பம் கொடுக்கபடாமை பல்லாயிரம் கேள்விகளை எழுப்புகிறது.
அமைச்சர் ரிசாத் தனது வேட்பாளர் தெரிவில் ஒரே ஊரில் இந்த இரண்டு மாறுபட்ட துருவங்களையும் களமிறக்கியது இவர்களின் பகையை தெரியாமலா? இல்லை இவர்களை ஒற்றுமை படுத்தவா?
சம்மாந்துறையில் திருமணம் செய்திருந்தாலும் அன்வரின் தாய் சம்மாந்துறையை சேர்ந்தவர் என்பதும் அவர் திருமணம் செய்திருக்கும் இடம் தலைவர் அஸ்ரப்பின் நெருங்கிய குடும்பம் என்பதும் அரசியலுக்கு புதியவராக இருந்தாலும் அரச,தனியார் நிறுவனங்களில் உயர் பதவி வகித்திருக்கும் இவர் எந்த ஊழலிலும் சம்பந்த படாதது இவருக்கு ஒரு ப்ளஸ் போய்ண்டாகவே உள்ளதை இங்கு கவனிக்க வேண்டியதே.
ஆனாலும் இஸ்மாயிளுக்கு இப்போது சம்மாந்துறையில் வாக்கு வங்கி அதிகரித்து வருவதும் இங்கு கவனிக்க பட வேண்டியதே.என்றாலும் அரசியல் அவதானிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு கிடைக்கும் ஆசனம் இவர்களுக்கு தான் கிடைக்கும் எனும் நால்வரின் பெயரில் இவர்கள் இருவரின் பெயரும் உள்ளதும் இங்கு வேடிக்கையே.
எது எப்படியாக இருந்தாலும் இனி வரப்போகும் நேரம் பனிப்போரின் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளதாக அறிய முடிகிறது.நேற்றைய கூட்டத்தை பார்க்க வந்த அன்வரின் ஆதரவாளர்கள் பலத்த ஏமாற்றத்துடன் திரும்பியும் உள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் ஆதரவு பெற காரணமாக இருந்தவர்களில் ஒருவராக இருக்கும் அன்வர்,சாய்ந்தமருது மக்களின் தெரிவாக அமைய போகும் சிராஸ்,மருதமுனை மக்களின் தெரிவாக இருக்கும் நதீர் ,பொத்துவில் மஜீத்,சம்மாந்துறை இஸ்மாயில்,மற்றும் இப்படி பலரின் போராட்டத்துடன் கட்சி செயலாளர்,தேசிய அமைப்பாளர்,தவிசாளர்,தலைவர் என பலரின் விடா முயற்சியால் அம்பாறையில் தோகை விரித்தாடும் மயிலின் நிலைமை இப்போது முன்னோக்கி செல்வதாக உள்ளது.அதேபோல சகல வேட்பாளர்களுக்குமிடையிலும் பனிப்போர் நடப்பதும் உண்மையே...
அகஸ்ட் 18 ம் திகதி பதில் கிடைக்கும் அதற்கிடையில் சிலரின் முகத்திரையும் கிழியும் அரசியல் சதுரங்கத்தின் காமெடி உடன் நாம் இணைந்திருப்போம் வாக்கை சத்தியத்தை நோக்கி அளிப்போம்.
சம்மாந்துறை சமீம்



0 Comments