Subscribe Us

ஒற்றையாட்சி முறைமையில் அதிகாரத்தை பகிரத்தயார்


தேசியப் பிரச்­சினை தீர்­வுக்­காக அதி­கா­ரத்தை பகிர்­வதில் எமக்கு எந்த பிரச்­சி­னையும் கிடை­யாது. எனினும் ஒற்­றை­யாட்­சியின் கீழ் அதி­கா­ரத்தை பகிர்­வதே அர­சாங்­கத்தின் திட்­ட­மாகும். அரசின் நிலைப்­பாட்டில் எந்­த­வொரு மாற்­ற­மு­மில்லை. புதிய பாரா­ளு­மன்­றத்­தி­னூ­டாக இதற்­கான விசேட பொறி­மு­றை­களை நாம் மேற்கொள்வோம் என்று நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ர­வுடன் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வாக அதி­கா­ரத்தை பகிரும் பொறி­மு­றையை நாம் ஆரம்­பிப்போம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
பாரா­ளு­மன்ற தேர்­தலை முன்­னிட்டு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை நேற்று முன் தினம் யாழ்ப்­பா­ணத்தில் வெளிட்­டதுடன் அதில் சமஷ்டி முறைமை தீர்வு வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­னபம் தொடர்பில் வின­விய போது கேச­ரிக்கு பத­ல­ளிக்­கை­யி­லேயே ரவி கருணாநாயக்க மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டார்.
ஒன்­றுப்­பட்ட இலங்­கைக்குள் தமிழ் பேசும் மக்­களின் வர­லாற்று வாழ்­வி­டங்­க­ளான வடக்கு கிழக்­கிற்கு சமஷ்டி கொள்­கையின் பிர­காரம் அதி உச்ச அதி­கா­ரப்­ப­கிர்­வே இனப்­பி­ரச்­சி­னைக்கு உரிய தீர்­வாக அமையும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தி­னூ­டாக வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
இது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் உப தலை­வரும் நிதி அமைச்­சரும் கொழும்பு மாவட்ட ஐ.தே.க வேட்­பா­ள­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்க கேச­ரிக்கு கருத்து தெரி­விக்­கையில்,
தேசிய பிரச்­சி­னைக்­காக அதி­கா­ரத்தை பகிர்­வ­தனால் எமக்கு எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை. நாட்டின் தேசிய பிரச்­சி­னை தீர்க்­கப்­பட்டு இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். இத­னூ­டாக நாட்டை வளர்ச்­சிக்­குட்­ப­டுத்த முடியும். ஆகவே ஒற்­றை­யாட்­சிக்குள் தேசி­யப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண்­பதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தான குறிக்­கோ­ளாகும்.
இருந்­த­போ­திலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஒன்­றுப்­பட்ட இலங்­கைக்குள் சமஷ்டி தீர்­வையே வேண்டி நிற்­கின்­றது. எனவே கூட்­ட­மைப்பின் நிலைப்­பா­டுகள் தொடர்பில் எம்மால் தட்­டிக்­க­ழித்து விட்டு செயற்­பட முடி­யாது. எனினும் எவ­ரு­டைய நிலைப்­பா­டுகள் எது­வாக இருப்­பினும் அது எமக்கு பிரச்­சினை இல்லை.
ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­கா­ரத்தை பகிர்­வதே தேசிய பிரச்­சி­னைக்கு உரிய தீர்­வாகும். குறித்த தீர்வு அனைத்து இனத்­த­வர்­க­ளுக்கும் சாத­க­மா­ன­தாக அமையும். எனவே அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டில் மாற்­ற­மில்லை. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் யோச­னையை மாத்­திரம் எம்மால் செவிமடுக்க முடியாது.
அனைத்து தரப்பினரினும் யோசனைகளை செவிமடுத்து ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்வதே அரசின் நோக்கமாகும். இதற்காக தேசியப் பிரச்சினை தீர்வு விடயத்தில் விசேட பொறிமுறை ஒன்றை புதிய பாராளுமன்றத்தினூடாக ஆரம்பிக்கவுள்ளோம் என்றார்.

Post a Comment

0 Comments