Subscribe Us

புத்தளம் இஜ்திமா மைதானத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டி

ரூஸி சனூன்  புத்தளம்


புத்தளம் சுப்பர் குரோஸ் விளையாட்டு கழகம் வருடா வருடம் நடாத்தி வரும் பெருநாள் விளையாட்டு போட்டிகள் இம்முறையும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (24,25) புத்தளம் இஜ்திமா மைதானத்தில் இடம்பெற்றது.

புத்தளம் நகரில் இத்தகைய பெருநாள் விளையாட்டு போட்டிகள் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளாக கடந்த நூறு வருட காலத்துக்கும் மேலாக வருடாந்தம் தொடராக நடாத்தப்பட்டு வருகிறது.

சிறுவர் சிறுமிகளுக்கான சைக்கிள் மற்றும் நெடுஒட்டம், வாலிபர் நெடுஒட்டம், வாலிபர் சைக்கிள் ஓட்டம், வயோதிபர் ஓட்டம், மாட்டு வண்டில் ஓட்டம், சகல ரகங்களிளுமான மோட்டார் சைக்கிள் ஓட்டம், தடை தாண்டி ஓட்டம், குதிரை ஓட்டம், முச்சக்கர வண்டி ஓட்டம் உள்ளிட்ட மற்றும் பல போட்டிகளும் நடந்தேறின.

மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டிகளில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து தேசிய ஓட்ட வீரர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வழமையாக அரசியல் பிரமுகர்களின் பக்க துணையோடு நடைபெற்று வந்த இந்த பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை இம்முறை புத்தளம் சுப்பர் குரோஸ் விளையாட்டு கழகம் அதன் தலைவர் எஸ்.எம். ரியாழின் வழிகாட்டலில் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் தொழில் அதிபர்களின்  அனுசரனைகளோடு நடாத்தி முடித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

போட்டிகளில் வெற்றி பெற்ற  வீர்ரகளுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

போட்டிகளுக்கு நடுவர்களாக கடந்த இரு தசாப்த காலங்களுக்கும் மேலாக பெருநாள் விளையாட்டு போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றி வரும் ஏ.எச்.எம். உமர் பாச்சா மற்றும் எம்.எஸ்.எம். ஜிப்ரி, எம்.ஓ.எம்.ஜாகீர், ஏ.எச். ரிஸ்வான், ஏ.எச்.எம். அன்வர்தீன் ஆகியோர் கடமையாற்றினர்.

-PuttalamOnline-
-PPF-































Post a Comment

0 Comments