புத்தளம் மாவட்டத்தின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்வது புத்தளம் தொகுதியும் அதில் வாழும் சிறுபான்மை சமூகமும் என்பதில் யாருக்கும் எவ்வித மாற்று கருத்தும் இருக்க முடியாது. இதற்கு பல்வேறு தேர்தல் முடிவுகள் சான்றாகும்.
புத்தளம் மாவட்டத்தின் அரசியலை தீர்மானிக்கும் இந்த பலம் எமது தொகுதிக்கும், எமது மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை சமூகத்திற்கும் பயனற்றதாகவும், மற்றும் புத்தளம் தொகுதி அரசியல் பலமிழந்து இருப்பதுவும் கவலையான விடயமே.
தமது அரசியல் வாழ்வுக்காக பிரதேச வாதத்தை அடிப்படையாக கொண்ட அல்லது தமது பிரதேச எல்லைக்குள் மட்டுபடுத்தி கொண்ட அரசியல் சிந்தனை புத்தளம் தொகுதி மக்களின் அரிசயல் பின்னடைவின் மிக பிரதான காரணம் என உறுதியாக சொல்லலாம்.
இன்னும் வெளிப்படையாக சொல்வதென்றால் அரசியல் களத்தில் புத்தளத்தான், அக்கரைபற்றான் கல்பிட்டியான், வந்தாவரத்தான் என்ற குறுகிய சிந்ததனை விதைக்கப்பட்டுள்ளது மிக பயங்கரமானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
சமூக விடயங்கள் எல்லாவற்றிலும் சிறந்த புரிந்துணர்வோடு வாழும் இப்பிரதேச மக்கள் அரசியல் விடயத்தில் மட்டும் இவ்வாறு தவறாக வழி காட்டப்பட்டிருப்பது சுயநல அரசியலே காரணம் என்பது வெளிப்படையானது.
இப்பிரதேச வாதத்தில் குளிர்காயும் வெளிப்பிரதேச பெரும்பான்மை அரசியல் வாதிகள், இதனூடாக புத்தளம் அரசியலை ஆக்கிரமித்து தனது அரசியல் கட்சியை வளர்க்க துடிக்கும் வன்னி அரசியல் தலைமை இந்த அரசியல் களத்தை மேலும் சிதைகிறார்கள் என்பது மட்டும் தெளிவான விடயம்
.
புத்தளம் அரசியல் களத்துக்கு PPAF முன்வைக்கும் அரசியல் தீர்வு!
புத்தளம் தொகுதியில் உள்ள அனைத்து பிரதேச மக்கள், மற்றும் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை மக்களையும் உள்ளடக்கிய மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மாவட்ட தலைமைத்துவ சபையாகும். அது புத்தளத்திற்கான அரசியல் தீர்மானங்களை முன்னெடுக்கும்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட சபையினால் புத்தளம், கல்பிட்டி, அக்கரைபற்று, மற்றும் வடபுல புத்தளம் சமூகத்தை பிரநிதித்துவ படுத்தி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். என்பது குறிப்பிடதக்கது. வெற்றிபெறும் PPAF முன்னணி வேட்பாளர்களை சூழச்சி முறையில் அப்பிரதேசங்களுக்கு வழங்குவதற்கு PPAF தலைமைத்துவ சபை முடிவெடுத்துள்ளது.
அத்துடன் விஷேடமாக (வடபுல) புத்தளம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளையும் முன்னுரிமை படுத்தி, உள்ளூர் அரசியல் மட்டங்களில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி படுத்துவது PPAF யின் ஒரு முக்கிய பணியாகவும் காணப்படுகிறது.
புத்தளம் சமூகமே PPAF என்ற அரசியல் சக்தியை வளர்ப்போம். நால்லதொரு அரசியல் கலாச்சாரத்தை இம்மண்ணில் உருவாக்கொவோம். பிரதேச வாதத்தை தகர்த்து எறிவோம்.


0 Comments