Subscribe Us

header ads

புத்தளம் தொகுதிக்கு MP ஓர் இமாலய இலக்கா? சவால் விடுகின்றார் Dilshan

-The Puttalam Times-

கடந்த முப்பது வருடங்களாக புத்தளம் தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிபெற முடியாமல் இருப்பதை யாவரும் அறிவர். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுகொள்ளும் நோக்கில் PPAF என்ற இளைஞர் அணியினால் உருவாக்கப்பட்ட 'ஒட்டகக் கூட்டணி' பல சவால்களுக்கு மத்தியில் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளனர். இவ்வாறு களம் இறங்கிய 'ஒட்டகக் கூட்டணி’யினால் இந்தமுறை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக்கொள்ள முடியுமா என்பதே இன்றைய நாட்களில் புத்தளம் தொகுதி மக்களிடம் இருக்கும் வினா?

புத்தளம் மாவட்டத்தை அனேகமாக UNP வெல்லக்கூடும் என்ற பாவலான எதிர்பார்ப்பு இருந்தாலும் UPFA உம் கடும் போட்டியாளராகவே இருக்கின்ற நிலைமையில் PPAF உறுப்பினர் ஒருவரைப் பெறவேண்டும் என்றால் 30 ஆயிரம் வேண்டும், 40 ஆயிரம் வாக்குகள் எடுக்கவேண்டும், எனவே இதுவும் வழமை போல ஒரு கனவாகவே முடியும் என்று ஆளாளுக்கு கருத்து சொல்லிவருவதை நாம் அறிவோம்.

இவர்களின் இந்த ‘கதை’ வெறும் வாய்பேச்சுதானா இல்லை ஏதேனும் கணிப்பு அடிப்படையில் அவ்வாறு சொல்கிறார்களா என்ற நோக்கத்தில் கடந்த காலங்களில் ஒவ்வொரு தேர்தல்களிளும் அளிக்கப்பட்டு வந்த வாக்கு வீதங்களை கவனமாக கருத்தில் கொண்டு தயாரிக்கபட்ட கணிப்பு இங்கு இணைக்கபட்டிருக்கிறது.
கணிப்பின் எடுகோள்கள் –
1. புத்தளம் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற எந்தவொரு பொதுத்தேர்தலிலும் வாக்களிப்பு வீதம் 55%- 60% ஆகும். (ஒவ்வொரு சதவீதத்திற்கும் தனித்தனியாக இரு கணிப்புகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன)

2. ஒவ்வொரு பொதுதேர்தலிலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5% இற்கும் அதிகமாகும்.

3. JVP மற்றும் பென்சேகாவின் கட்சி உட்பட ஏனைய சுயேற்சை குழுக்கள் 4% வாக்குகளை பெரும்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது, இதுவரை காலமும் தேசிய கட்சிகளை பிரதிநித்துவபடுத்திய புத்தளம் தொகுதி வேட்பார்கள் முப்பது ஆயிரம் விருப்பு வாக்குகளுக்கு அதிகமாக பெற்றும் வெல்லமுடியாமல் போன சோக வரலாறுகளுக்கு மத்தியில் வெறும் 16,000 வாக்குகளை பெரும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்ள முடியும் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

நாம் வெண்ணையை கையில் வைத்துக்கொண்டுதான் முப்பது வருடங்கள் நெய்க்கு அலைந்திருக்கிறோமா?
குறிப்பு: இது PPAF இன் வேண்டுகோள்களுக்காக அல்லது வேறு அரசியல் நோக்கங்களுக்காக எழுதப்பட்ட பதிவு இல்லை. மேலும் இந்த கணிப்பீட்டை சரியான 'தரவுகள்' மூலம் சவாலுக்கு உட்படுத்தவும் முடியும்.

- டில்ஷான் முஹம்மத் -

55% வீதம் வாக்களிப்பு நடைபெற்றால்

60% வீதம் வாக்களிப்பு நடைபெற்றால்

Post a Comment

0 Comments